தமிழ் சமையல்ருசி

நீங்களும் எளிதாக சமைக்கலாம்!. உங்கள் குறிப்புகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்

மட்டர் பனீர் மசாலா!

தேவையானவை:
பட்டாணி &1 கப், பனீர் & 200 கிராம், பெ. வெங்காயம்&3, தக்காளி & 5, இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, முந்திரி அரைத்த விழுது & தலா 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் & 2 டீஸ்பூன், தனியா தூள் & 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் & அரை டீஸ்பூன், எண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன், நெய் & 1 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவைக்கு.
செய்முறை:
பட்டாணியை உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு நன்றாகக் காய விடுங்கள். அதில், வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள். அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள். கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள். அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி!

0 மறுமொழிகள்:

Post a Comment

<<