தமிழ் சமையல்ருசி

நீங்களும் எளிதாக சமைக்கலாம்!. உங்கள் குறிப்புகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்

தக்காளி குருமா

தேவையானவை:

பெ. வெங்காயம் - 3, தக்காளி - 6 முதல் 8 வரை, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1 கப், கசகசா - 1 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிது.அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 6, பட்டை, லவங்கம் - தலா 1, சோம்பு - கால் டீஸ்பூன், மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு.

செய்முறை:

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைத்தெடுங்கள்.


இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர், அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

தளதள தக்காளி குருமா மணமணக்கும்!

- நன்றி: விகடன்

1 மறுமொழிகள்:

  • At மணிகà¯�கà¯�, எழà¯�தியவரà¯�:Anonymous ramya said…

    சமைக்க மிகவும் சுலபமான குருமா.அதுமட்டும் இல்லாம ரொம்ப ருசியான குருமவும்கூட.

     

Post a Comment

<<